இந்தியா வருகிறார் இலங்கை அதிபர் அநுர குமார திசாநாயக்க.. மீனவர்கள் பிரச்சனை பேசப்படுமா?
இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை தொடர்ச்சியாக கைது செய்து வரும் நிலையில் இலங்கை அதிபர் அநுர குமார திசாநாயக்க இந்தியா வர இருப்பதாகவும் அப்போது மீனவர்கள் பிரச்சனை குறித்து பேசப்படும் என்றும் கூறப்படுகிறது.
இலங்கை அதிபராக சமீபத்தில் பதவி ஏற்ற அநுர குமார திசாநாயக்க டிசம்பர் 15ஆம் தேதி இந்தியாவுக்கு வர உள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 15 முதல் 17 வரை இந்தியாவில் அவர் சுற்றுப்பயணம் செய்வார் என்றும் இந்த பயணத்தின் போது குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்டவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
இலங்கை அதிபருடன் இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் உள்ளிட்ட சிலரும் இறுதியாக வர இருக்கின்றனர். சில மாதங்களில் இந்த பேச்சுவார்த்தையின் போது தமிழக மீனவர்கள் தொடர்ச்சியாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் பிரச்சினை குறித்து ஆலோசிக்கப்படும் என்றும், தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதற்கு நிரந்தர தீர்வு ஏற்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Edited by Siva