காய்கறிகளை குறிப்பிட்ட அளவுக்கு மேல் வாங்கக்கூடாது: சூப்பர் மார்க்கெட்டில் திடீர் நிபந்தனை..!
சூப்பர் மார்க்கெட்டுகளில் காய்கறிகளை ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் வாங்க கூடாது என சூப்பர் மார்க்கெட் பொதுமக்களுக்கு நிபந்தனை விதைத்திருப்பது இங்கிலாந்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உக்ரைன் போர் காரணமாக காய்கறிகள் எரிபொருள்கள் மின்சாரம் ஆகியவை பற்றாக்குறையாக இருப்பதாக இங்கிலாந்து நாடு அறிவித்துள்ளது. எனவே எரிபொருள் மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில் விவசாயிகள் காய்கறிகளை சந்தைக்கு கொண்டு வரும் செலவுகளும் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் இதனால் பல விவசாயிகள் காய்கறி சாகுபடி குறைத்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் சூப்பர் மார்க்கெட்டுகளுக்கு காய்கறிகளின் வரத்து குறைவாக இருப்பதால், காய்கறிகள் தட்டுப்பாடு காரணமாக காய்கறி வாங்க பொதுமக்களுக்கு அளவு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இங்கிலாந்து வெளியேறியதால் அண்டை நாடுகளிலிருந்து காய்கறி இறக்குமதி செய்வதும் பாதிக்கப்பட்டுள்ளதால் இங்கிலாந்து நாட்டில் காய்கறிக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
எனவே சூப்பர் மார்க்கெட்டுகளில் பொதுமக்கள் அதிக அளவு காய்கறிகளை வாங்கக்கூடாது என்றும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் இங்கிலாந்து நாட்டு மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Edited by Mahendran