மீண்டும் சோமாலியா கொள்ளையர்கள் அட்டகாசம்..! 19 பேரை மீட்ட இந்திய கடற்படை
சோமாலியாவின் கிழக்கு கரையோரப் பகுதியில் எஃப்.வி. ஒமாரி என்ற படகில் இருந்து 11 ஈரானிய மற்றும் 8 பாகிஸ்தானியர்களையும் கடல் கொள்ளையர்ளிடமிருந்து இந்திய கடற்படை மீட்டுள்ளது.
கடந்த 29-ம் தேதி சோமாலியாவின் கிழக்குக் கடற்கரையோரப் பகுதியில் கடற்கொள்ளையர்களால் கடத்த முயன்ற அல் நயீமி என்ற மீன்பிடிக் கப்பலைக் ரோந்துப் பணியில் இருந்த இந்தியாவின் ஐஎன்எஸ் சுமித்ரா கப்பல் துரிதமாக செயல்பட்டு கப்பலை மீட்டது. அதிலிருந்த 19 பேரும் மீட்கப்பட்டனர்.
அந்த வகையில், இரண்டாவது முறையாக மீண்டும் ஈரானை சேர்ந்த மற்றொரு கப்பலை இந்திய கடற்படையினர் மீட்டுள்ளனர்.
சோமலியாவின் கிழக்கு கடலில் ஈரான் நாட்டுக்குச் சொந்தமான எஃப்.வி. ஒமாரி என்ற மீன்பிடி படகு சென்றுள்ளது. அதனை சோமாலிய கடற்கொள்ளையர்கள் சிறைபிடிக்க முயற்சித்துள்ளனர். அப்படகில் ஈரான் நாட்டைச் சேர்ந்த 11 பேரும், பாகிஸ்தானைச் சேர்ந்த 8 பேரும் இருந்துள்ளனர். அப்போது வழியாக சென்ற இந்திய கடற்படைக்குச் சொந்தமான ஐஎன்எஸ் ஷர்தா போர்க்கப்பல் சோமாலிய கொள்ளையர்களிடமிருந்து படகை கைப்பற்றினர்.