வெள்ளி, 22 ஆகஸ்ட் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 3 பிப்ரவரி 2024 (14:48 IST)

சஸ்பெண்ட் செய்யப்பட்ட கல்லூரி முதல்வர்..! 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு..!!

geetha
திருவாரூரில் மோசடி புகாரில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட திருவிக கல்லூரி முதல்வர் கீதா மீது 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
 
திருவாரூர் மாவட்டம் கிடாரங்கொண்டான் பகுதியில் செயல்பட்டு வருகிறது திரு.வி.க அரசு கலைக்கல்லூரி‌. இக்கல்லூரியின் முதல்வராக 2018-ம் ஆண்டு முதல் கோ.கீதா என்பவர் பணியாற்றி வருகிறார்.  கடந்த ஆண்டு மார்ச் 31-ம் தேதி தமிழ்நாடு கல்லூரி கல்வி இயக்குநராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டு, அந்தப் பதவியையும் கீதா வகித்து வந்தார்.
 
இந்த நிலையில் கீதா மீது, கல்லூரி கல்வி இயக்குநர் பதவிக்கு வர 5 கோடி பணம் கொடுத்ததாகவும், அந்தப் பணத்தை முறைகேடாகப் பேராசிரியர்களை நியமனம் செய்து பெற்றதாகவும் கீதா மீது குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் தமிழ்நாட்டில் உள்ள பட்டியலின மாணவர்களின் நலனுக்கு எதிராகச் செயல்பட்டதாகவும் புகார்கள் எழுந்தது.
 
இந்நிலையில் அவர் அரசு ஆவணங்களை கிழித்ததாகவும், அரசு அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும் கூறப்படுகிறது. குறித்து தஞ்சை மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனர் தனராஜன் திருவாரூர் எஸ்.பி ஜெயக்குமாரிடம் புகார் அளித்தார். இதை அடுத்து பிப்ரவரி ஒன்றாம் தேதி கீதா தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில் கீதா மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து திருவாரூர் தாலுகா போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.