வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 19 அக்டோபர் 2019 (19:11 IST)

பெரியவர்களுக்கு டான்ஸ் ஆட கற்றுத்தரும் குட்டிப்பாப்பா! – வைரல் வீடியோ

குட்டி குழந்தை ஒன்று டான்ஸ் கற்று கொடுக்க அதை போலவே பெரியவர்களும் டான்ஸ் ஆடும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.

டான்ஸ் ஆட பயிற்சி கொடுக்கும் மையம் ஒன்றில் ஒரு பெண் குழந்தை மற்றவர்கள் ஆடுவதை பார்த்து தானும் ஆட முயற்சித்திருக்கிறது. குழந்தைகளுக்கே உரிய தனி பாணியில் ஆடிய அந்த நடனத்தை கண்டு பலரும் வியந்து போனார்கள். ஏன் அந்த குழந்தையை போலவே நாமும் ஆடக்கூடாது என சிந்தித்த அவர்கள் அந்த குழந்தை போடும் ஸ்டெப்புகளை தாங்களும் போட்டுள்ளனர்.

தன்னை போலவே மற்றவர்களும் ஆடுவதை கண்ட அந்த குழந்தை புதிது புதுதாக ஸ்டெப்புகளை போட்டு அவர்களை ஆட செய்துள்ளது. தற்போது கியூட் குழந்தையின் கூல் டான்ஸ் வீடியோ சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.