சிவப்பு சட்டை தான்...நைசாக ’பைக்’கை திருடிய நபர் ...சிசிவிடி காட்சி வெளியீடு ! வைரலாகும் வீடியோ
திருக்கோவிலூர் பேருந்து நிலையம் அருகே நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தை ஒருவர் திருடிச் சென்றுள்ள சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் காட்சிகள் தற்போது வைரலாகிவருகிறது.
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் பகுதியைச் சேர்ந்தவ மனோகர்.இவர் பொதுஇடங்களுக்கு வாகனத்தில் சென்று தேனீர் விற்பனை செய்து வருகிறார்.
இந்நிலையில் திருக்கோவிலூர் பேருந்து நிலையம் அருகே கார் நிறுத்தி வைக்கும் இடத்தில் தனது டூவீலரை நிறுத்திவிட்டு மக்களிடம் டீ விற்க சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது, வாகனத்தை காணவில்லை.
அதனால் அதிர்ச்சி அடைந்த மனோகரன் போலீஸாரிடம் சென்று புகார் அளித்துள்ளார். இதுகுறித்து சிசிடிவி கேமராவை ஆய்வு செய்த போது, சிவப்புச் சட்டை அணிந்த ஒருவர் மனோகரனின் வாகனத்தை திருடிச் செல்லுவது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார் குற்றவாளியை தேடி வருகின்றனர்.