”பனி மூட்டத்திலிருந்து எட்டி பார்க்கும் கட்டிடங்கள்”.. மனதிற்கு குளிர்ச்சி தரும் வைரல் வீடியோ
துபாய் முழுவதும் அழகாக பனி மூடியுள்ளதை வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார் துபாயின் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தன்.
அரபு நாடுகளில் எப்பொழுதும் எப்பொழுதும் வெயில் அனலாக கொளுத்திகொண்டே இருக்கும். ஆனால் அதிசயாமாக இன்று காலை துபாயை பனி மூட்டம் மூடியுள்ளதாக தெரிகிறது. நகரத்தின் மேலே ஒரு பனி போர்வையை போர்த்தியது போல் உள்ளது துபாய்.
இந்நிலையில் இதனை வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார் துபாய் நாட்டின் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தன். இதில் பனி மூட்டங்களிடையே கட்டிடங்கள் எட்டி பார்ப்பது போல், மிகவும் அழகாக உள்ளது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.