செவ்வாய், 25 ஜூன் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 16 மே 2024 (07:22 IST)

துப்பாக்கியால் சுடப்பட்ட ஸ்லோவேக்கியா பிரதமர்.. வயிற்றில் 4 குண்டுகள் பாய்ந்ததால் பரபரப்பு..!

ஸ்லோவேக்கியா நாட்டு பிரதமர் திடீரென துப்பாக்கியால் சுடப்பட்டதாகவும் அவரது வயிற்றில் நான்கு குண்டுகள் பாய்ந்து உள்ளதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

மத்திய ஐரோப்பிய நாடான  ஸ்லோவேக்கியாவில் பிரதமராக இருப்பவர் ராபர்ட் பிகோ. இவர் ஏற்கனவே இரண்டு முறை பிரதமராக இருந்து உள்ள நிலையில்  கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மீண்டும் பிரதமர் ஆனார்.

இந்த நிலையில் நேற்று நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்ட போது திடீரென்று மர்ம நபர் ஒருவர் பிரதமர் ராபர்ட் பிகோவை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதாகவும் இதில் பிரதமர் வயிற்றில் நான்கு குண்டுகள் துளைத்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் மிதந்த பிரதமரை மருத்துவமனையில் அனுமதித்ததாகவும் தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் 4 மணி நேரம் அவரது உயிருக்கு ஆபத்தான நிலை இருந்ததாகவும் கூறப்பட்டது.

ஆனால் தற்போது வெளியாகியுள்ள தகவல் படி அவர் அபாய கட்டத்தை தாண்டி விட்டதாகவும் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஸ்லோவேக்கியா பிரதமர் சுடப்பட்டதற்கு பல்வேறு உலக நாட்டு தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva