1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: புதன், 15 மே 2024 (13:51 IST)

பிரதமர் மோடியின் 10 ஆண்டுகால ஆட்சி எப்படி உள்ளது. ராஷ்மிகா மந்தனா கருத்து..!

பிரதமர் மோடியின் 10 ஆண்டுகால ஆட்சி குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றி ராஷ்மிகா கூறிய கருத்துக்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் கூறியதாவது:
 
மும்பை - நவி மும்பை நகரங்களை இணைக்கும் வகையில் நாட்டிலேயே மிக நீளமான கடல்வழி பாலமாக அமைக்கப்பட்டுள்ள குறித்து கூறிய ராஷ்மிகா, அடல்சேது என்ற பாலம் காரணமாக  பயண நேரம் குறைந்துள்ளது என்றும், இது சாத்தியம் என நாம் யாராவது நினைத்துப் பார்த்திருப்போமா? என்று கேள்வி எழுப்பினார்.
 
கடந்த 10 ஆண்டுகளில் நாடு வளர்ச்சி கண்டுள்ளதாகவும், உள்கட்டமைப்பு சார்ந்த திட்டமிடல் அபாரமாக உள்ளதாக கூறிய ராஷ்மிகா, இளம் தலைமுறையை கொண்டுள்ள இந்தியா வேகமாக வளர்ந்து வருகிறது என்று தெரிவித்தார்.
 
மேலும் இந்தியா ஸ்மார்ட்டான நாடு, இளைஞர்கள் அதிகம் இருக்கும் நாடு,  இப்போது அவர்களுக்கு அந்த பொறுப்பு உள்ளது என்றும், அவர்கள் சரியான திசையில் பயணிக்கிறார்கள்  என்றும், நாட்டின் வளர்ச்சிக்காக மோடிக்கு வாக்களியுங்கள் என ராஷ்மிகா அந்த பேட்டியில் கூறியுள்ளார்.
 
Edited by Mahendran