புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 10 நவம்பர் 2021 (16:52 IST)

சிங்கப்பூர் சிங்கங்களுக்கு கொரோனா பாசிட்டிவ்: அதிர்ச்சியில் பொதுமக்கள்!

சிங்கப்பூர் மிருக காட்சியில் உள்ள ஒருசில சிங்கங்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
ஏற்கனவே கடந்த இரண்டு ஆண்டுகளாக மனிதர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது என்பதும் உலகம் முழுவதும் இதனால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர் என்பதும் லட்சக்கணக்கானோர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தற்போது தான் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக உலகம் முழுவதும் குறைந்து வரும் நிலையில் தற்போது விலங்குகளுக்கு குறிப்பாக சிங்கங்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ள தகவல் வெளிவந்துள்ளது 
 
சிங்கப்பூரில் உள்ள மிருகக்காட்சி சாலை ஒன்றில் வைக்கப்பட்டிருந்த சிங்கங்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது .அதேபோல் ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு சில சிங்கங்களுக்கு கொரோனா வைரஸ் அறிகுறி தெரிவதாகவும் அந்த சிங்கங்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன