திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 14 மே 2022 (16:52 IST)

ஐக்கிய அமீரகத்தின் புதிய அதிபராக ஷேக் முகமது பின் சயீத் தேர்வு

1 hour ago Mint Sheikh Mohamed Bin Zayed
ஐக்கிய அரபு எமிரேட் அதிபர் ஷேக் கலிபா பின் சையத்   காலமானதை அடுத்து, நீண்ட கால ஆட்சியாளரான ஷேக் முகமது பின் சயீத் நல் நஹ்யான் புதிய அதிபராக தேர்வு செய்யப்ட்டுள்ளார்.

ஐக்கிய அரபு எமிரேட் அதிபர் ஷேக் கலிபா பின் சையத் ர் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த சில மாதங்களாக சிகிச்சை எடுத்து வந்தார்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் காலமானதாக ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்துள்ளது. அவருக்கு வயது 73.

கடந்த 2004ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் ஐக்கிய அரபு அமீரக அதிபராக இருந்து வரும் ஷேக் கலிபா பின் சையத் மறைவுக்கு உலக தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர். இதையடுத்து, ஷேக் கலீப்பாவின் இறுதிச் சடங்கு இன்று நடந்தது. அரசு மரியாதையுடன் அவரது உடல்  நல்லடகம் செய்யப்பட்டது.

அவரது மரணத்தை அடுத்து, நீண்ட கால ஆட்சியாளரான ஷேக் முகமது பின் சயீத் நல் நஹ்யான் புதிய அதிபராக தேர்வு செய்யப்ட்டுள்ளார்.

மேலும், ஏழு அமீர்களின் ஆட்சியாளர்களைக் கொண்ட பெடரல் சப்ரீம் கவுன்சிலின் உறுப்பினர்களால் ஷேக் முகமது அதிபராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.