புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 29 டிசம்பர் 2021 (16:18 IST)

நடிகை அமலாபாலுக்கு 'கோல்டன் விசா' வழங்கிய ஐக்கிய அமீரகம்.

இந்திய சினிமா பிரபலங்களுக்கு கோல்டன் விசா வழங்கி வரும் நிலையில் , பிரபல நடிகை அமலாபாலுக்கு கோல்டன் விசா வழங்கி கவுரவித்துள்ளது ஐக்கிய அமீரகம்.

ஏற்கனவே மம்மூட்டி, மோகன்லால், துல்கர் சல்மான், திரிஷா, மீரா ஜாஸ்மின், பாடகி சித்ரா உள்ளிட்ட பல நட்சத்திரங்களுக்கு கோல்டன் விசாவை ஐக்கிய அரபு எமிரேட் வழங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகர் பார்த்திபனுக்கு நேற்று ஐக்கிய அரபு நாட்டின் தூதரகமும் கோல்டன் விசாவை வழங்கி கவுரவித்துள்ளது. ஐக்கிய அரபு நாட்டின் கோல்டன் விசா பெறும் முதல் தமிழ் நடிகர் பார்த்திபன் என்ற பெருமை அவருக்கு கிடைத்துள்ளது.

இதையடுத்து,  நடிகை திரிஷாவுக்கு கோல்டன் விசா கிடைத்தது. தற்போது நடிகை அமலாபாலுக்கு கோல்டன் விசா வழங்கியுள்ளது ஐக்கிய அமீரகம். இதுகுறித்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. இந்த விசா 10 ஆண்டுகள் செல்லுபடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.