1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 17 ஆகஸ்ட் 2018 (14:31 IST)

நூற்றுக்கணக்கான திமிங்கலங்கள் கொன்று குவிப்பு - ரத்த ஆறாக மாறிய கடல்

டென்மார்க்கில் உள்ள கடலில் நூற்றுக்கணக்கான திமிங்கலங்கள் கொன்று குவிக்கப்படுவதால், அதனின் ரத்தம் கடலில் கலந்து கடல் ரத்த ஆறாக மாறியுள்ளது.
டென்மார்க்கில் உள்ள ஒரு தீவில் வாழும் மக்கள் கோடை காலத்தின் முடிவில் கடலில் வாழும் திமிங்கலங்களை கரைக்கு இழுத்து வந்து அதனை கொல்லும் பழக்கத்தை தொன்று தொட்டு செய்து வருகின்றனர்.
 
அங்கு வாழும் மக்கள் கூட்டம் கூட்டமாக கடலுக்குள் சென்று திமிங்கலங்களை கரைக்கு இழுத்து வருகின்றனர். பின் சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை திமிங்கலங்களை கொல்லும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர். 
இதற்கு விலங்குகள் நல ஆர்வலர்களிடம் இருந்து கடும் எதிர்ப்புகள் கிளம்பிய போதிலும், அப்பகுதி வாசிகள் இதனை ஆண்டுதோறும் திருவிழாவாக நடத்தி மகிழ்கின்றனர். திமிங்கலங்கள் கொல்லப்படுவதால் அதனின் ரத்தம் கடலில் கலந்து நீர் சிவப்பாக மாறியுள்ளது.