1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 28 ஜூலை 2022 (17:14 IST)

மரண தண்டனையாக டிவியில் நேரடியாக ஒளிபரப்ப நீதிமன்றம் உத்தரவு: அதிர்ச்சி தகவல்

court
பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு மரண தண்டனை அளிக்கப்பட்ட நிலையில் இந்த மரணதண்டனையை நேரலையில் டிவியில் ஒளிபரப்பு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
எகிப்து நாட்டின் பல்கலைகழகம் ஒன்றில் படித்து கொண்டிருந்த சக மாணவியை கொலை செய்த வழக்கில் 21 வயது மாணவர் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்தது 
இந்த விசாரணை முடிவில் அவர் குற்றம் செய்தவர் என்று உறுதி செய்யப்பட்டதையடுத்து நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்தது 
 
மேலும் இந்த மரண தண்டனையை நிறைவேற்றுவதை நேரடியாக டிவியில் ஒளிபரப்பு செய்ய அரசுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இனி ஒரு தவறு நடக்க கூடாது என்றால் மரணதண்டனையை நேரடியாக ஒளிபரப்புங்கள் என்றும் நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது