திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 23 ஜூலை 2022 (15:54 IST)

“பிரிவதைத் தவிர வேறு வழியில்லை…” விவாகரத்து குறித்து மனம் திறந்த சமந்தா

நடிகை சமந்தா சமீபத்தில் பாலிவுட்டின் பிரபல நிகழ்ச்சியான காஃபி வித் கரண் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

நடிகை சமந்தா கடந்த நாக சைதன்யாவை விவாகரத்து செய்ததை அடுத்து  அந்த சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டது. விவாகரத்துக்குப் பிறகு அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் நடிப்பில் காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் ரிலீஸானது. அடுத்து குஷி, யசோதா மற்றும் சகுந்தலம் ஆகிய படங்கள் வரிசையாக ரிலீஸுக்குக் காத்திருக்கின்றன.

ஆனாலும் அவ்வப்போது விவாகரத்து குறித்த செய்திகளை இருவருமே எதிர்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் பிரபல ரியாலிட்டி ஷோவான காஃபி வித் கரண் நிகழ்ச்சியில் சமந்தா கலந்துகொண்டார். அப்போது விவாகரத்து குறித்து பேசிய அவர் “திருமண வாழ்க்கையில் இணக்கமான சூழல் இல்லை என்றால் பிரிவதைத் தவிர வேறு வழியில்லை. முதலில் இந்த முடிவு கடினமானதாக இருந்தது. ஆனால் இப்போது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளேன். மேலும் எப்போதையும் விட வலிமையாக உள்ளேன். இந்த வாழ்க்கை இப்போது எனக்கு வசதியாகவே உள்ளது” எனக் கூறியுள்ளார்.