1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 27 மார்ச் 2022 (11:58 IST)

மனித ரத்தத்தில் கலந்த மைக்ரோ பிளாஸ்டிக்: பெரும் ஆபத்து என எச்சரிக்கை!

மனித ரத்தத்தில் மைக்ரோ பிளாஸ்டிக் கலந்துள்ளதாக ஆராய்ச்சியின் முடிவில் தெரியவந்துள்ளதை அடுத்து மனித இனத்திற்கே பெரும் ஆபத்து வரும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
உலகின் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்து வருவதை அடுத்து மனித இனத்திற்கு மட்டுமின்றி அனைத்து உயிரினங்களுக்கும் ஆபத்து ஏற்பட்டு வருவதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
 
இந்த நிலையில் மனித ரத்தத்தில் மைக்ரோ பிளாஸ்டிக் கலந்திருப்பதை நெதர்லாந்து ஆய்வாளர்கள் முதல் முறையாக உறுதி செய்து உள்ளனர். 22 தன்னார்வலர்கள் இரத்த மாதிரிகளை பெற்று ஆய்வு செய்ததில் 17 பேரின் ரத்தத்தில் மைக்ரோ பிளாஸ்டிக் கலந்துள்ளதாக முடிவுகள் வந்துள்ளன. இதனால் மனித இனத்திற்கே மிகப்பெரிய பேராபத்தை ஏற்படுத்தலாம் என ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்