1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 21 மே 2019 (13:44 IST)

மெக்கா நோக்கி பாய்ந்த ஏவுகணைகள்: சுட்டு வீழ்த்திய சவுதி

இஸ்லாமியர்களின் புனித தலமான மெக்காவை தாக்குவதற்காக ஹவுத்தி புரட்சியாளர்கள் அனுப்பிய ஏவுகணைகளை வானிலேயே சுட்டு சிதறடித்தது சவுதி.
 
ஏமனில் நடந்து வரும் உள்நாட்டு யுத்தத்தில் அரசாங்கத்துக்கு எதிராக ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் சண்டையிட்டு வருகிறார்கள். இதில் ஏமன் அரசாங்கத்துக்கு சவுதி அரேபியா ஆயுத உதவிகள் செய்து வருகிறது. அதே போல ஈரான் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கு உதவி வருகிறது. சமீபத்தில் சவுதிக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனத்தின் பைப் லைனை ஹவுத்தி புரட்சியாளர்கள் தாக்க, அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சவுதி விமானப்படை புரட்சியாளர்களை ஏவுகணைகள் கொண்டு தாக்கியது. இதில் கடுப்பான கிளர்ச்சியாளர்கள் புனித் தலமான மெக்காவை குறி வைத்து ஏவுகணைகளை அனுப்பியுள்ளனர். அதை வானிலேயே தாக்கி அழித்தது சவுதி. 
 
இஸ்லாமியர்களின் புனித தலத்தின் மீது தாக்குதல் நடத்த முயற்சி செய்தது சவுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.