உக்ரைன் வான்பரப்பை மூடினால் விளைவுகள் மோசமாகும்: புதின் எச்சரிக்கை
உக்ரைன் வான்பரப்பை மூடினால் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும் உக்ரைன் நாட்டிற்கு ஆதரவாக இருக்கும் நேட்டோ நாடுகள் மீதும் தாக்குதல் நடத்தப்படும் என்றும் ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்து இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
உக்ரைன் மீது சரமாரியாக ரஷ்யா தாக்கி வரும் நிலையில் உக்ரைன் வான் எல்லையை மூட நேட்டோ நாடுகள் முடிவு செய்திருப்பதாக தெரிகிறது
இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள ரஷ்ய அதிபர் புதின், உக்ரைன் வான் பரப்பை மூட முடிவு செய்தால் நேட்டோ நாடுகளும் இந்த போரில் கலந்து கொண்டதாக கருதப்படும் என்றும் அதன்பின் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும் எச்சரித்துள்ளார். ரஷ்ய அதிபரின் இந்த எச்சரிக்கையால் நேட்டோ நாடுகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளன