செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 5 மார்ச் 2022 (08:30 IST)

உக்ரைன் அணு உலை மீது விடிய விடிய ரஷ்யா தாக்குதல்: புல்பூண்டு கூட மிஞ்சாது என எச்சரிக்கை!

உக்ரைன் அணு உலை மீது விடிய விடிய ரஷ்யா தாக்குதல்: புல்பூண்டு கூட மிஞ்சாது என எச்சரிக்கை!
உக்ரைன் நாட்டின் அணு உலை மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவதாகவும் அணு உலை தீப்பிடித்து எரிந்து வருவதாகவும் கூறப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக உக்ரைன் மீது படையெடுத்து உள்ள ரஷ்யா அங்கு சரமாரியாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் ஐரோப்பாவின் மிகப்பெரிய அணு உலை உக்ரைனில் உள்ள நிலையில் அந்த அணு உலை மீது ரஷிய படைகள் தாக்கியதாகவும் இதனால் அணு உலையின் ஒரு பகுதியை தீப்பிடித்து எரிவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
அணு உலையில் பாதுகாக்கப்பட்ட அணுக்கள் தீப்பிடித்து எரிந்தால் உக்ரைன் நாட்டில் புல் பூண்டு கூட மிஞ்சாது என்று அணுஉலை விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர் 
 
தற்போதைக்கு அணு உலையில் ஏற்பட்ட தீ விபத்து கட்டுப்படுத்தப்பட்டாலும் ரஷ்ய படைகளின் கட்டுப்பாட்டில் அந்த அணு உலை இருப்பதால் உக்ரைன் மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்