உக்ரைன் மீதான போர் நிறுத்தம் என ரஷ்யா அறிவிப்பு!
உக்ரைன் மீது கடந்த 10 நாட்களுக்கும் மேலாக ரஷ்யா போர் தொடுத்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில் உக்ரைன் மீதான போர் இன்று ஒரு நாள் மட்டும் நிறுத்தப்படும் என ரஷ்யா அறிவித்துள்ளது.
ரஷ்யா நாட்டின் முக்கிய நகரங்களில் இருந்து அப்பாவி மக்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட வெளிநாட்டு மக்கள் வெளியேறுவதற்கு வசதியாக போர் நிறுத்தம் செய்யப்படவேண்டும் என உக்ரைன் உள்பட உலக நாடுகள் வேண்டுகோள் விடுத்தன
இந்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட ரஷ்ய அதிபர் புதின் உக்ரைன் நாட்டில் உள்ள முக்கிய நகரங்களில் உள்ள மாணவர்கள் உள்பட வெளிநாட்டவர் வெளியேற வசதியாக இன்று ஒரு நாள் மட்டும் போர் நிறுத்தம் செய்வதாக ரஷ்யா அறிவித்துள்ளது
இதனை அடுத்து இந்த வாய்ப்பை பயன்படுத்தி உக்ரைனில் உள்ள வெளிநாட்டவர்கள் உடனடியாக வெளியேற வேண்டுமென்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.