1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 17 மார்ச் 2021 (08:27 IST)

டுவிட்டருக்கு தடை விதிக்கப்படும்: ரஷ்யா அரசு எச்சரிக்கை!

கடந்த சில மாதங்களாக டுவிட்டரில் சர்ச்சை ஏற்பட்டு வருவதும் இந்தியா உள்பட பல நாடுகள் டுவிட்டருக்கு எச்சரிக்கை விடுத்து வருவதுமான செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கிறது 
 
இந்தியாவில் விவசாயிகள் போராட்டம் குறித்து சர்ச்சைக்குரிய டுவிட்டர் பதிவுகளை நீக்க வேண்டும் என மத்திய அரசு வேண்டுகோள் விடுத்தது என்றும் ஆனால் அந்த வேண்டுகோளை ஏற்றுக் கொள்ளாததால் இதற்கு மாற்றாக வேறு செயலியை மத்திய அரசை ஏற்படுத்த இருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தன
 
இந்த நிலையில் தற்போது வந்த தகவலின்படி ரஷ்யாவில் டுவிட்டருக்கு தடை விதிக்கப்படும் என ரஷ்ய அரசு எச்சரித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தடைசெய்யப்பட்ட உள்ளடக்க பதிவுகளை நீக்க் வேண்டும் என்றும் அவ்வாறு நீக்காவிட்டால் ரஷ்யாவில் டுவிட்டருக்கு தடை விதிக்கப்படும் என்றும் அந்நாட்டு அரசு எச்சரித்துள்ளது. இந்த எச்சரிக்கைக்கு டுவிட்டர் என்ன பதிலளிக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்