திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 19 ஜூலை 2018 (15:52 IST)

675 பேரை நரபலி கொடுத்த மத போதகர்!

ஆப்பிரிக்கா நாட்டை சேர்ந்த மத போதகர் ஒருவர் மத சடங்குகளுக்காக இதுவரை 675 பேரை நரபலி கொடுத்துள்ளதாக வெளிப்படையாக கூறி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
ஆப்பிரிக்க நாடான கானாவில் மத போதகர் ஒருவர் மத சடங்குகளுக்காக பலரை நரபலி கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். நரபலிக்காக சாத்தான் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உதவியதாக தெரிவித்துள்ளார். 
 
அவர் வெளியிட்ட வீடியோவில், முகமூடி அணிந்து பேசியுள்ளார். கடந்த 17 ஆண்டுகளாக சாத்தானுடன் வாழ்வதாக தெரிவித்துள்ளார். அதோடு, மத சடங்குகளுக்காக 675 பேரை கொலை செய்துள்ளதாகவும் தெரிவித்தார். 
 
அதில் பெரும்பாலானோர் சிறுவர்கள் எனவும் தெரிவித்துள்ளார். ஆனால் இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணை எதுவும் நடைபெற்றுள்ளதா என்பதை அவர் குறிப்பிடவில்லை.  
 
இந்த சம்பவம் கானாவில் எந்த பகுதியில் நடைபெற்றது, எப்போது நடைபெற்றது உள்ளிட்ட தகவல்களை வெளியிட மறுத்துள்ளார். மேலும், நான் தீய சக்தியுடன் பிறந்தவர் எனவும் தெரிவித்துள்ளார்.