திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : புதன், 6 ஜனவரி 2021 (10:40 IST)

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட செவிலியர் பரிதாப பலி!

ஃபைசர் - பயோஎன்டெக் நிறுவனத்தின் கொரோனா வைரஸ் தடுப்பூசியை போட்டுக்கொண்ட செவிலியர் பலி. 

 
உருமாறிய கொரோனா வைரஸின் ஆதிக்கம் தற்போது குறிப்பிட்ட சில நாடுகளில் அதிகரித்து வருவதாலும் முந்தைய கொரோனாவின் தாக்கமும் அப்படியே இருப்பதாலும் கொரோனா தடுப்பூசியை உலகம் முழுவதும் பல நாடுகள் நடைமுறைக்கு கொண்டுவந்துள்ளது. 
 
இந்தியாவிலும் ஜனவரி 13 முதல் கொரோனா வைரஸ் தடுப்பூசி பயன்பாட்டிற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் போர்சுகல் நாட்டின் போர்ட்டோ நகரத்தின் மருத்துவமனையில் பணியாற்றி வந்த செவிலியர் ஒருவர் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் ஃபைசர் - பயோஎன்டெக் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்டார். 
 
இரு தினங்களாக எந்த பக்கவிளைவுகளும் இல்லாமல் இருந்த நிலையில் எந்த அறிகுறியும், பாதிப்பும் இல்லாமல் அந்த செலியியர் உயிரிழந்துள்ளார். இந்த மரணம் ஃபைசர் - பயோஎன்டெக் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியின் பாதுகாப்பு மற்றும் செயல்திறன் குறித்து சந்தேகங்களை எழுப்பியுள்ளது.