அதிபர் டிரம்பை முறைத்த ’சிறுமிக்கு 60 அடி உயரத்தில் ஓவியம்’...
காலநிலை மாற்றத்துக்கு எதிராக உலகம முழுவதும் குரல் கொடுத்து வருபவர் சிறுமி கிரெட்டா தன்பெர்க் (16 வயது).
இவர்,சமீபத்தில் ஐக்கிய நாடுகள் சபையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில்,.பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அதிபர்களை, பிரதமர்களைப் பார்த்து, ’உங்களுக்கு எல்லாம் எவ்வளவு தைரியம்..என கேள்வி கேட்டு, கால நிலை மாற்றத்தை சரிசெய்ய வேண்டும் . எதிர்கால சந்ததிகள் வாழ உதவ வேண்டும் ’என கேட்டுக்கொண்டார்.
அதன்பி டிரம்ப் பிற நாட்டு அதிபர்கள் ஐநா சபை அதிகாரிகளுடம் பேசிக்கொண்டிருந்தபோது,. அவரைப் பார்த்துத் தன்பெர்க் முறைக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியானது.
இந்நிலையில், இயற்கை பாதுகாக்கும் சமூக விழிப்புணர்வு தன்பெர்க்கின் முயற்சியை பாராட்டி அமெரிக்காவில் உள்ள சான் பிரான்ஸிஸ்கோ நகரில் உள்ள ஒரு சுவரில் 60 அடி உயரத்துக்கு தன்பெர்க்கின் ஓவியம் வரையப்பட்டுள்ளது. இந்த ஓவியத்தை வரைந்தவர் ஓவியர் ஆண்ட்ரெஸ் பீட்டர்ஸ்செல்வி ஆவார். இந்த ஓவியம் குறித்த போட்டொ சமூக வலைதளத்தில் வைரல் ஆகிவருகிறது.