’36 ஆயிரம் அடி’ உயரத்தில்...நடுவானில் சிக்கிய இந்திய விமானம்.. உதவி செய்த பாகிஸ்தான் !
இந்திய விமானம் ஒன்று 150 பயணிகளுடன் ஜெய்பூரில் இருந்து பாகிஸ்தான் நாடு வழியாக மஸ்கட் சென்று கொண்டிருந்தது. அந்த நேரம் பார்த்து, வானில் மோசமான வானிலையால் விமானம் தடுமாறியதாக தெரிகிறது.
விமானம் 36 ஆயிரம் உயரத்தில் பறந்து கொண்டிருந்தது.அப்போது, விமானி அருகே உள்ள விமான நிலையங்களுக்கு ’மேடே’ எனப்படும் அவசர செய்தியை அனுப்பியுள்ளார்.
அந்த இக்கட்டான சூழ்நிலையை புரிந்துகொண்ட பாகிஸ்தான் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளர், சரியான நேரத்தில் விமானத்தை ஆபத்திலிருந்து மீட்டு, பாகிஸ்தான் வான் வழியில் பயணம் செய்ய உதவினார்.
பால்கோட் தாக்குதல் சம்பவத்துக்கு பிறகு பிரதமர் மோடி பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது குறிப்ப்பிடத்தக்கது.