1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 20 ஏப்ரல் 2023 (21:48 IST)

பிரபல இளம் பாப் இசைப்பாடகர் மரணம்..ரசிகர்கள் அதிர்ச்சி

mubin
பிரபலமான தென்கொரிய பாப் இசைப்பாடகர் மூன்பின் திடீரென்று மரணமடைந்தார். இது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகளவில் இசைக்குழுவில் பிரபலமானவர்கள் பட்டியலில் எப்போதும் தென்கொரிய இசைக்குழுவைச் சேர்ந்தவர்களுக்கு தனி இடமிருக்கும்.

அந்தவகையில், தென்கொரியாவைச் சேர்ந்த பிரபல பாப் பாடகர் மூன்பின். இவர், தொடக்க காலத்தில் மாடலாக இருந்து, நடிகராம வளர்ச்சியடைந்து, பாடகராக மக்களால் அறியப்பட்டார்,.

இவர், அஸ்ட்ரோ என்ற இசைக்குழுவில் அங்கம் வகித்த நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்பு சன்ஹா இசைக்குழுவில் சேர்த்தார். அதன்பின்னர் 2016-ல் எஸ்ட்ரோ இசைக்குழுவில் இணைந்து நடிகராகவும் பாடகராகவும் வலம் வந்து கொண்டிருந்தார்.

இந்த நிலையில், மூன்பின்(25) தென்கொரிய தலைநகர் சியோலில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.

மூன்பின் திடீரென்று உயிரிழந்தது அந்த நாட்டு மக்கள் மற்றும் பாப் இசை ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முதற்கட்ட விசாரணையில் இவர் தற்கொலை செய்துகொண்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். சில ஆண்டுகளாக கொரியா நாட்டில் பாடகர்கள் தற்கொலை அதிகரித்து வருகிறது.