திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 30 அக்டோபர் 2020 (10:41 IST)

பிரான்சில் தொடரும் பயங்கரவாத தாக்குதல்; பிரதமர் மோடி எச்சரிக்கை!

பிரான்சில் கடந்த சில தினங்கள் முன்னதாக ஆசிரியர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட நிலையில் தற்போது சர்ச் ஒன்றில் நடந்துள்ள பயங்கரவாத தாக்குதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்சில் முகமது நபியை சர்ச்சைக்குரிய வகையில் சித்தரித்த கார்ட்டூனை வைத்து பாடம் நடத்தியதாக ஆசிரியர் ஒருவர் தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் சில நாட்கள் முன்னதாக பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பத்தின் போது ஆசிரியரை கொன்ற நபர் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்நிலையில் நபிகளை தவறாக சித்தரித்ததற்கு பிரான்ஸ் மீது ஈரான், துருக்கு உள்ளிட்ட நாடுகளில் இருந்து எதிர்ப்புகள் வலுத்துள்ளன.

இந்நிலையில் நேற்று பிரான்ஸில் உள்ள நைஸ் தேவாலயத்திற்குள் நுழைந்த பயங்கராவதி ஒருவன் அங்கிருந்த மக்களை சரமாரியாக தாக்கியதில் மூவர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் பிரான்ஸில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்திகு இரங்கல் தெரிவித்து பதிவிட்டுள்ள மோடி “பயங்கரவாதிகளை ஒழிப்பதில் இந்தியா பிரான்ஸுக்கு ஆதரவாக இருக்கும்” என தெரிவித்துள்ளார்.