வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 11 ஜனவரி 2022 (12:27 IST)

ஒமிக்ரான் வைரஸுக்கான தடுப்பூசி - ஃபைசர் நிறுவனம் புது தயாரிப்பு!

ஒமிக்ரான் வைரஸுக்கான தடுப்பூசி மார்ச் மாதத்திற்குள் தயாராகிவிடும் என ஃபைசர் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

 
கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவ தொடங்கியதை அடுத்து புதுப்புது வைரஸ் ஆக உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் உலகம் முழுவதும் ஒமிக்ரான் வைரஸ் பரவி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த ஒமிக்ரானுக்கு தடுப்பூசிகள் இன்னும் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை. 
 
இந்நிலையில் ஒமிக்ரான் வைரஸுக்கான தடுப்பூசி மார்ச் மாதத்திற்குள் தயாராகிவிடும் என ஃபைசர் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இது குறித்து அந்நிறுவனம் கூறியுள்ளதாவது, டெல்டா வகை வைரசை விட வேகமாக பரவும் தன்மை கொண்ட ஒமிக்ரான் வைரஸ் உள்ளன. 
 
ஒமிக்ரான் தடுப்பூசி  மார்ச்சில் தயாராகும் என ஃபைசர் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. நேரடியாக ஒமிக்ரானுக்காக தயாரிக்கப்படும் இந்த தடுப்பூசி மிதமான அறிகுறி மற்றும் அறிகுறி இல்லாத தொற்றில் இருந்தும் பாதுகாப்பு அளிக்கும் என தெரிகிறது.