செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 11 ஜனவரி 2022 (11:23 IST)

2 டோஸ் தடுப்பூசி, 2ஆம் முறையாக கொரோனா: ரைசா வில்சன் புலம்பல்!

2 டோஸ்  தடுப்பூசி செலுத்தி கொண்ட போதிலும் இரண்டாம் முறையாக கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக நடிகை ரைசா வில்சன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 
 
பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரும் நடிகையுமான ரைசா வில்சன் தடுப்பூசி இரண்டு டோஸ் செலுத்தி கொண்டவர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் கடந்த ஆண்டு அவர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்தார் என்றும் தெரிந்தது
 
இந்த நிலையில் தற்போது மீண்டும் அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இம்முறை மூக்கடைப்பு, ஜலதோஷம், தலைவலி, மற்றும் காய்ச்சல் ஆகியவை இருப்பதாகவும் இந்த கொரோனா எப்போது தான் ஒழியும் என்று தெரியவில்லை என்றும் அவர் புலம்பலும் பதிவு செய்துள்ளார். மேலும் அனைவரும் மாஸ்க் அணிந்து கொண்டு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்