திங்கள், 25 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 11 நவம்பர் 2024 (13:09 IST)

டிரம்ப் - புதின் முக்கிய பேச்சுவார்த்தை.. உக்ரைன் - ரஷ்யா போர் முடிவுக்கு வருகிறதா?

அமெரிக்க அதிபராக பதவியேற்க இருக்கும் டிரம்ப், ரஷ்ய அதிபர் புதினுடன் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், அந்த பேச்சுவார்த்தை உக்ரைன் உடனான போர் சம்பந்தப்பட்டதாக இருக்கும் என்று கூறப்படுவதால், ரஷ்யா- உக்ரைன் போர் முடிவுக்கு வர அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

அமெரிக்க அதிபராக டிரம்ப் வரும் ஜனவரி மாதம் பதவியேற்க இருக்கும் நிலையில் அவர் இப்போதே தனது வேலையை தொடங்கி விட்டதாக கூறப்படுகிறது. குறிப்பாக, இஸ்ரேல்-பாலஸ்தீன போர் மற்றும் ரஷ்யா- உக்ரைன் போர் ஆகிய இரண்டு போர்களையும் நிறுத்த வேண்டிய பணிகளில் அவர் இறங்கி இருப்பதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து பேசிய டிரம்ப், தற்போது ரஷ்ய அதிபர் புதினுடனும் தொலைபேசியில் பேசியுள்ளார். இருதரப்பு பேச்சுவார்த்தையின் அடிப்படையில் போர் நிறுத்தம் அறிவிப்பு வர இருப்பதாகவும் கூறப்படுகிறது. போரை நிறுத்துவதற்கான தீர்வு குறித்து புதின் மற்றும் ட்ரம்ப் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது.

உக்ரைனுக்கு ஆயுதம் மற்றும் ராணுவ பலத்தை அமெரிக்கா வழங்கி வரும் நிலையில், போர் நிறுத்தத்திற்கு ரஷ்யா உடன்பட்டால் அமெரிக்கா தனது படையை வாபஸ் பெற்றுக் கொள்ளும் என்றும் கூறப்படுகிறது.


Edited by Mahendran