1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : புதன், 26 அக்டோபர் 2022 (18:44 IST)

பாகிஸ்தான் செய்தியாளர் கென்யாவில் கொலை !

ashrad
ஆப்பிரிக்க நாடான கென்யாவின் பாகிஸ்தான்  செய்தியாளர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கென்யா நாட்டில்  நடந்த ஒரு சாலை விபத்தில் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த செய்தியாளர்  பலியானதாக ஒரு தகவல் வெளியானது.

பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் அதிபரின் ஆதரவாளரும் பிரபல தனியார் செய்தித் தொலைக்காட்சியின் நிருபராகப் பணியாற்றியவர் அர்ஷிப்.

இவர், சில காலம் துபாயில் இருந்துவிட்டு, சமீபத்தில், ஆப்பிரிக்க நாடான கென்யாவிற்குச் சென்றுள்ளார்.

அப்போது, அவர் சாலை விபத்தில் உயிரிழந்ததாக அங்கிருந்து தகவல் வெளியான நிலையில்,  திருட்டுக் காரைப் பிடிப்பதற்காக வைப்பட்டிருந்த தடுப்புகளை மீறி அர்ஷத்தின் கார் சென்றபோது, அவரை நோக்கி கென்ய போலீஸார் துப்பாக்கியால் சுட்டதில் அவர் பலியானதாக தகவல் வெளியாகிறது.

Edited by Sinoj