திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 18 அக்டோபர் 2022 (18:13 IST)

10 லட்சத்திற்கும் அதிகமான குழந்தைளுக்கு அவசர உதவிதேவை - பாலிவுட் நடிகை

kenya
கென்யாவில்  சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமான குழந்தைகள் அவசர உதவி கோரும் நிலையில் உள்ளதாக பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தெரிவித்துள்ளார்.

பாலிவுட் சினிமாவில் முன்னனி நடிகை பிரியங்கா சோப்ரா. இவர் யுனிசெஃப்ஃபின் நல்லெண்ணத்தூதராகப் பதவி வகித்து வருகிறது.

இந்த நிலையில்,  கிழக்கு ஆப்பிரிக்க நாடான கென்யாவுக்குச் சென்றுள்ளார், அங்கு வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் வாழ்க்கை நிலையை நேரில் பார்த்து அவர்களில் சூழல் பற்றி கேட்டறிந்தார்.

பல ஆண்டுகாலமான மழையின்றி நிலத்தடி  நீர்வற்றி, குடிக்க நீர் நின்றி வாழ்வாரம் கேள்விக் குறியான நிலையில் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

இங்கு வாழும் மக்களுக்கு அவரச உதவி தேவைப்படுவதாக பிரியங்கா சோப்ரா தன் சமூக வலைதளப் பக்கங்களில் தெரிவித்துள்ளார்.

மேலும், தன் பயோவில் உள்ள இணைப்பை கிளிக் செய்து   இந்த மக்களுக்கு நிதி உதவி செய்யும்படி கோரிக்கை விடுத்துள்ளார்.

Edited by Sinoj