விவாதத்திற்கு தயாரா? மோடிக்கு இம்ரான்கான் கேள்வி!
என்னோடு விவாதத்துக்கு தயாரா என பிரதமர் மோடியை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அழைப்பு விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ரஷ்ய நாட்டிற்கு சுற்றுப் பயணம் செய்துள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் ரஷ்யா டுடே என்ற தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் நான் இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைக்காட்சியில் விவாதம் செய்ய விரும்புகிறேன்
இந்த வாதத்தின் மூலம் இருநாட்டு பிரச்சனைகள் முடிவுக்கு வந்தால் அது இந்திய துணைக்கண்டத்தில் உள்ள கோடிக்கணக்கான மக்களுக்கு பயனாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்
பாகிஸ்தான் பிரதமரின் விவாத அழைப்பை இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஏற்றுக்கொள்வாரா அப்படி ஒரு விவாதம் நடக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்