1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 25 அக்டோபர் 2022 (16:46 IST)

ரிஷி சுனக் எங்கள் நாட்டை சேர்ந்தவர்: உரிமை கோரும் பாகிஸ்தான்!

rishi sunak
இங்கிலாந்து பிரதமராக பதவி ஏற்க இருக்கும் ரிஷி சுனக் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் என்று கூறப்படும் நிலையில் ரிஷி சுனக் பாகிஸ்தானை சேர்ந்தவர்  என பாகிஸ்தான் உரிமை கொண்டாடி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
ரிஷி சுனக் ஒரு இந்தியர் என்றும், அவர் இந்து மதத்தை கடைபிடிப்பவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் அவரது தாத்தா 1935 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் இருந்ததாகவும் அவர் தனது மனைவியுடன் அதன்பிறகு கென்யாவுக்கு சென்றதாகவும் கூறப்படுகிறது
 
எனவே ரிஷி சுனக் பாகிஸ்தான் பூர்வீகத்தை சேர்ந்தவர் என்றும் அவர் எங்கள் நாட்டைச் சேர்ந்தவர் என்றும் பாகிஸ்தானியர்கள் தெரிவித்து வருகின்றனர் 
 
இதுகுறித்து பாகிஸ்தானிலுள்ள பல நெட்டிசன்கள் டுவிட்டரில் பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து பல பாகிஸ்தானியர்கள் ஒரு பாகிஸ்தானை சேர்ந்தவர் தான் இங்கிலாந்தின் பிரதமர் பதவிக்கு வந்துள்ளார் என்று கூறி வருகின்றனர். இதனால் டுவிட்டரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
Edited by Siva