ஆசைக்கு இணங்க மறுத்ததால் சோறு போடல! – பிரபல நடிகைக்கு நேர்ந்த சோகம்!
தன்னை படப்பிடிப்புக்கு அழைத்து சென்று வன்கொடுமை செய்ததாக பாகிஸ்தான் நடிகை இந்திய தயாரிப்பாளர் மீது புகார் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் மெஹ்ரீன்ஷா. இவர் அஜர்பைஜானில் இந்திய தயாரிப்பாளர் ராஜ் குப்தாவும், பாகிஸ்தான் இயக்குனர் இஷான் அலியும் படப்பிடிப்பின்போது தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் “அஜர்பைஜானின் தலைநகர் பாகுவில் ராஜ் குப்தா, இஷான் அலியுடன் படப்பிடிப்பு தொடர்பாக சென்றிருந்தேன். அங்கு சென்றபின் இருவரது நடத்தையும் மாறியது. அவர்களுடன் நடிப்பது என் கனவாக இருந்தது. ஆனால் அவர்கள் படிப்பிடிப்பிற்கு வந்ததாக தெரியவில்லை.
ராஜ் குப்தாவும், இஷான் அலியும் அவர்களது மோசமான ஆசைகளுக்கு நான் இணங்காததால் என்னை கொடுமைப்படுத்தினர். பெண்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதற்காக இதை சொல்கிறேன்” என கூறியுள்ளார்.
மேலும் அவர்கள் உணவு கூட கொடுக்காமல் துன்புறுத்தியதாகவும், பின்னர் படக்குழு உறுப்பினர் ஒருவரிடமிருந்து நிறைய உதவிகள் பெற்றேன் என்றும் கூறியுள்ளார்.
Edit By Prasanth.K