விண்வெளி மையத்தில் இருந்து ஆன்லைன் வகுப்பு: சீன விஞ்ஞானிகள் அசத்தல்!
விண்வெளி மையத்தில் இருந்து ஆன்லைன் வகுப்பு: சீன விஞ்ஞானிகள் அசத்தல்!
சீன விஞ்ஞானிகள் விண்வெளி மையத்திலிருந்து மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு எடுத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சமீபத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உலகம் முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஆசிரியர்கள் ஆன்லைன் வகுப்புகளை எடுத்தனர் என்பது தெரிந்ததே
இந்த நிலையில் சீனாவை சேர்ந்த விண்வெளி வீரர்கள் விண்வெளி நிலையத்திலிருந்து மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு எடுத்துள்ளனர். விண்வெளி மற்றும் விண்வெளி அறிவியலை பற்றி பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இந்த ஆன்லைன் பதிப்பு எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
இதன் மூலம் மாணவர்கள் விண்வெளி குறித்த விழிப்புணர்வை தெரிந்து கொள்வார்கள் என்றும் எதிர்காலத்தில் அவர்கள் விண்வெளி வீரர்கள் ஆக வேண்டும் என்ற ஆசை ஏற்படும் என்றும் சீன அரசு தெரிவித்துள்ளது. சீன அரசின் இந்த நடவடிக்கைக்கு அந்நாட்டு மக்கள் பெரும் வரவேற்பு அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.