திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 9 டிசம்பர் 2021 (19:16 IST)

2030ஆம் ஆண்டுக்குள் சொந்த விண்வெளி நிலையம்: மத்திய அரசு தகவல்

2030ஆம் ஆண்டுக்குள் இந்தியாவுக்கு என தனி விண்வெளி மையம் தயாராகிவிடும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. 
 
இந்தியாவுக்கு என சொந்த விண்வெளி நிலையம் அமைக்க வேண்டும் என்று கடந்த சில ஆண்டுகளாக இந்திய அரசு முயற்சித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் மாநிலங்களவையில் அமைச்சர் ஜிதேந்திர சிங் இதுகுறித்து கூறிய போது இந்தியாவுக்கு என தனி விண்வெளி நிலையம் 2030ஆம் ஆண்டுக்குள் தயாராகிவிடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
முன்னோட்டமாக அடுத்த ஆண்டு ஆளில்லா விண்கலம் ஒன்று விண்ணில் செலுத்தப்படும் என்றும் 2022ஆம் ஆண்டு இறுதியில் ரோபோவை ஏற்றிச் செல்லும் விண்கலம் விண்ணில் செலுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்