செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 2 டிசம்பர் 2021 (20:59 IST)

900% உயர்ந்தது ஒமிக்ரான் மதிப்பு: தொழிலதிபர்கள் மகிழ்ச்சி!

ஒரு பக்கம் உலகம் முழுவதும் ஒமிக்ரான் என்ற புதிய உருமாறிய வைரஸ் மனித குலத்தை அச்சுறுத்தி வரும் நிலையில் ஒமிக்ரான் என்ற பெயருடைய கிரிப்டோகரன்சி 900 சதவீதம் உயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
புதிய உருமாறிய கொரோனா வைரஸ்க்கு உலக சுகாதார அமைப்பு சமீபத்தில் ஒமிக்ரான் என பெயர் வைத்தது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் ஒமிக்ரான் என்ற பெயரைக் கொண்ட கிரிப்டோகரன்சியின் மதிப்பு கடந்த சில நாட்களாக ஜெட் வேகத்தில் உயர்ந்தது 
 
இந்த நிலையில் இன்றைய நிலவரப்படி ஒமிக்ரான் கரன்சியின் மதிப்பு 900 சதவிகிதம் உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே இதில் முதலீடு செய்த தொழிலதிபர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது