திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 17 அக்டோபர் 2017 (19:01 IST)

அணு ஆயுத போர் விரைவில் வெடிக்கும்: வடகொரியா உறுதி!!

அமெரிக்கா மற்றும் வடகொரியா இடையே மோதல் ஏற்பட்டு வரும் நிலையில், அணு ஆயுத போர் எந்த நேரத்திலும் வெடிக்கும் என்று வடகொரியா பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது.


 
 
ஐநா மற்றும் உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி ஆயுத பரிசோதனைகளில் ஈடுபட்டு வருகிறது வடகொரியா. மேலும், அணு அயுதங்கள் மட்டுமின்றி ஹைட்ரஜன் குண்டுகள் மீதும் சோதனை நடத்தி வருகிறது. 
 
வடகொரியாவின் இத்தகையை அச்சுறுத்தலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தென்கொரியாவுடன் இணைந்து அமெரிக்கா கடற்படை பயிற்சியை துவங்கி உள்ளது. 
 
இது குறித்து ஐநாவுக்கான வடகொரிய துணை தூதர் செய்தி ஒன்ரை வெளியிட்டுள்ளார், சுய பாதுகாப்புக்காக வடகொரியா அணு ஆயுதங்கள் வைத்து கொண்டு இருப்பதில் தவறில்லை. 
 
அணு ஆயுதத்தில் வடகொரியா தன்னிறைவு பெற்றுள்ளது. அணு குண்டு, ஹைட்ரஜன் குண்டு, கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கி அழிக்கும் அணுகுண்டு என்று அனைத்து வகையிலான குண்டுகளை வடகொரியா தன்னிடத்தே கொண்டுள்ளது.
 
எங்களது எல்லைக்குள் ஒரு இஞ்ச் அமெரிக்கா நுழைந்தாலும், அவர்கள் உலகின் எந்த எல்லையில் இருந்தாலும் தாக்கி அழிப்போம் என தெரிவித்துள்ளார்.