திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : ஞாயிறு, 15 அக்டோபர் 2017 (12:49 IST)

உலகத்தையும், வியாபாரத்தை அழிக்காமல் ஓயமாட்டேன்: வைரலாகும் மோடி, கிம் போஸ்டர்!!

பிரதமர் மோடி மற்றும் வடகொரிய அதிபர் கிம் இருவரையும் இணைத்து உத்திர பிரதேசத்தில் ஓட்டபட்டிருக்கும் போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 
 
பிரதமர் நரேந்திர மோடியின் பண்மதிப்பிழப்பு நடவடிகையும், ஜிஎஸ்டி அமலாக்கமும் இந்திய பொருளாதாரத்தை சரிவில் கொண்டு முடித்துள்ளது. அதோடு மக்களுக்கும் இந்த நடவடிக்கைகள் திருப்திகரமாக இல்லை.
 
இந்நிலையில், உத்தர பிரதேசத்தில் வடகொரியாவின் அதிபர் கிம் ஜாங் உடன் ஒப்பிட்டு பிரதமர் மோடியின் போஸ்டர் ஒட்டப்பட்டு உள்ளது. 
 
அந்த போஸ்டரில் உலகத்தை அழிக்காமல் ஓயமாட்டேன். வியாபாரத்தை அழிக்காமல் விட மாட்டேன் என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது. 
 
இது தொடர்பாக போலீசார் ஒருவரை கைது செய்துள்ளனர். மேலும், 22 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.