திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 14 அக்டோபர் 2017 (19:15 IST)

அமெரிக்கா, தென் கொரியா போர் பயிற்சி: சிக்கலில் வடகொரியா!!

அமெரிக்காவும், தென் கொரியாவும் இணைந்து கடற்படை போர் பயிற்சியில் ஈடுபட உள்ளது. இதனால் வடகொரியாவிற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.


 
 
அமெரிக்காவும், தென்கொரியாவும் இணைந்து அடுத்த வாரம் கொரிய தீபகற்ப பகுதியில் கடற்போர் பயிற்சியில் ஈடுபட உள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ் அதகவளையும் அமெரிக்கா வெளியிட்டுள்ளது. 
 
இந்நிலையி சிக்கலில் உள்ள வடகொரியா தன்னை காப்பாற்றிக்கொள்ள அமெரிக்க ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்தவுள்ளதாக தெரிகிறது. 
 
ஹவா சாங் 14, ஹவா சாங் 13, ஹவா சாங் 12 போன்ற ஏவுகணையை வடகொரியா தயாரித்து இருந்ததாகவும் செய்தி வெளியானது. 
 
எனவே, அமெரிக்காவும், தென் கொரியாவும் இணைந்து கடற்போர் பயிற்ச்சியில் ஈடுபடும் போது வடகொரியா மீண்டும் ஏவுகணை தாக்குதலில் ஈடுபடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.