செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 3 அக்டோபர் 2023 (15:49 IST)

இயற்பியலுக்கான நோபல் பரிசு.. 3 நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகளுக்கு அறிவிப்பு..!

2023ம் ஆண்டின் இயற்பியலுக்கான நோபல் பரிசு மூவருக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த மூவரும்  அமெரிக்கா, ஜெர்மனி, ஸ்வீடன் நாடுகளை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 
ஒவ்வொரு ஆண்டும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் என ஆறு துறைகளில் நோபல் பரிசு வழங்கப்பட்டு வரும் நிலையில் இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் நேற்று முதல் அறிவிக்கப்பட்டு வருகின்றன. முதல் நாளான நேற்று மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.
 
இந்த நிலையில் இன்று இயற்பியலுக்கான நோபல் பரிசு  அமெரிக்கா, ஜெர்மனி, ஸ்வீடன் நாடுகளை சேர்ந்த 3 விஞ்ஞானிகளான பியரி அகோஸ்தினி, பெரங்க் க்ரவுஸ், ஆனி ஹூலியர் ஆகியோர்கள் பெறுகின்றனர்.
 
இந்த மூவருக்கும் நோபல் பரிசுடன், 8 கோடி ரூபாய்க்கான ரொக்கப் பரிசும் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran