வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 25 ஜூன் 2018 (12:59 IST)

நைஜீரியா மதக்கலவரத்தில் 86 பேர் பலி

நைஜீரியாவில் இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மதக்கலவரத்தில் 86 பேர் பலியாகியுள்ளனர்.
 
ஆப்பிரிக்கா நாடான நைஜீரியாவில் நிலப்பிரச்சனை தொடர்பாக இனக்கூழுக்களுக்கு இடையே மதக்கலவரம் ஏற்படுவது வழக்கம். இந்த மதக்கலவரத்தால் கடந்த 2009ம் ஆண்டு ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர்.
 
இந்நிலையில், அங்குள்ள பரிகின் லாடி பகுதியில் மீண்டும் இரு பிரிவினருக்கு இடையே மதக்கலவரம் ஏற்பட்டுள்ளது. இந்த மதக்கலவரத்தில் 86 பேர் பலியாகியுள்ளதாகவும். மேலும், பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
 
இதனால் அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. போலீசார் அங்கு பெரிதளவில் குவிக்கப்பட்டுள்ளனர். அதனால் மக்கள் அனைவரும் வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.