வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 14 ஜனவரி 2023 (22:22 IST)

நித்யானந்தாவின் ''கைலாசா நாட்டிற்கு'' புதிய அங்கீகாரம்!

nithyanantha
தமிழ் நாட்டைச் சேர்ந்த நித்யானந்தா பெங்களூரில் ஆசிரமம் நடத்தி வந்த   நிலையில், அவர் மீது பாலியல் புகார்கள் கொடுக்கப்பட்டது.

இதையடுத்து, அவரை போலீஸார் தேடி வருகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் இருந்து தப்பிச் சென்ற நித்யானந்தா , கைலாசா என்ற தனித் தீவில் தன் சிஷ்யர்களுடன் வசித்து வருவதாகக் கூறினார்.

இந்த நிலையில், நித்யானந்தாவின் கைலாசா  நாட்டை இறையாண்மை பெற்ற நாடாக அமெரிக்க  நாட்டைச் சேர்ந்த நெனார்க் நகர  நிர்வாகம் அங்கீகரித்துள்ளது.

இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், நியூ ஜெர்சி மாகாண நிவார்க்  நகர மேயர்   மற்றும் நித்யானந்தா இதற்கான  ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.