1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 14 ஜனவரி 2023 (14:47 IST)

துணிவு படத்தோட முன்கதைய வினோத் எடுப்பார்னு நெனைக்குறேன்… மஞ்சுவாரியர் பதில்!

அஜித், மஞ்சுவாரியர் உள்ளிட்டோர் நடித்துள்ள துணிவு திரைப்படம் வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்றுள்ளது.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீஸ் ஆன துணிவு திரைப்படம் பாசிட்டிவ்வான விமர்சனங்களை பெற்றது. தமிழகத்தில் மிகப்பெரிய வசூல் செய்து வருகிறது. இந்நிலையில் இப்போது அமெரிக்காவிலும் இந்த படத்தின் வசூல் அதிகரித்துள்ளதாக படத்தை வெளியிட்ட சரிகம நிறுவனம் வெளியிட்டுள்ளது.

வழக்கமான வெளிநாடுகளில் அஜித் படத்துக்கு கிடைக்கும் வசூலை விட இந்த படத்துக்கு அதிக வசூல் முதல்நாளில் கிடைத்துள்ளதாம். படம் நல்ல விமர்சனங்களைப் பெற்றதும், லைகா செய்த மார்க்கெட்டிங்கும் மிகப்பெரிய அளவில் உதவியாக இருந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு யுட்யூப் சேனலுக்கு பேட்டி அளித்த மஞ்சுவாரியரிடம் ரசிகர்கள் ‘துணிவு படத்தின் prequel படம் எடுக்க வேண்டும்’ எனக் கோரிக்கை வைத்தனர். அதற்கு மஞ்சுவாரியர் “கண்டிப்பா அதை இயக்குனர் வினோத் செய்வார்னு நம்புறேன்”எனப் பதிலளித்துள்ளார்.