அமெரிக்காவில் மாஸ் காட்டும் அஜித்தின் துணிவு திரைப்படம்… விநியோக நிறுவனம் வெளியிட்ட அப்டேட்!
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீஸ் ஆன துணிவு திரைப்படம் பாசிட்டிவ்வான விமர்சனங்களை பெற்றது.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீஸ் ஆன துணிவு திரைப்படம் பாசிட்டிவ்வான விமர்சனங்களை பெற்றது. தமிழகத்தில் மிகப்பெரிய வசூல் செய்து வருகிறது. இந்நிலையில் இப்போது அமெரிக்காவிலும் இந்த படத்தின் வசூல் அதிகரித்துள்ளதாக படத்தை வெளியிட்ட சரிகம நிறுவனம் வெளியிட்டுள்ளது.
வழக்கமான வெளிநாடுகளில் அஜித் படத்துக்கு கிடைக்கும் வசூலை விட இந்த படத்துக்கு அதிக வசூல் முதல்நாளில் கிடைத்துள்ளதாம். படம் நல்ல விமர்சனங்களைப் பெற்றதும், லைகா செய்த மார்க்கெட்டிங்கும் மிகப்பெரிய அளவில் உதவியாக இருந்துள்ளதாக சொல்லப்படுகிறது.
2 நாளில் 5 லட்சம் அமெரிக்க டாலர்களை (4 கோடி ரூபாய்) இந்த படம் அமெரிக்காவில் மட்டும் வசூலித்துள்ளது.