சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழாவுக்கு தயாராகும் புதிய பீர்!
இங்கிலாந்து நாட்டின் அரசியாக நீண்டகாலமாக (70 ஆண்டுகள் என இறக்கும் காலம் வரை) இருந்தவர் எலிசபெத் –II. இவர் கடந்தாண்டு செப்டம்பர் 8 ஆம் தேதி காலமானார்.
இவரது மறைவையொட்டி, இங்கிலாந்து நாட்டின் புதிய மன்னராக 3 ஆம் சார்லஸ் அரியணையின் ஏறினார். இதற்கான முடிசூட்டு விழா வரும் மே மாதம் 6 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இந்த விழா பிரமாண்டமாக நடைபெறும் என்று பக்கிங்காம் அரண்மனை ஏற்கனவே அறிவித்தது.
இவ்விழாவில், அரச மரபுப்படி, சார்லஸ் கையில் செங்கோல், தடி ஆகியவவற்றை ஏந்தி அரியணையில் அமர்வார். இந்த விழாவில் , உலகில் முக்கிய தலைவர் என 2000 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சார்லஸ்னின் முடிசூட்டு விழாவையொட்டி, ஒரு மதுமான ஆலையில், ரிட்டர்ன் ஆப் தி கிங் என்று புதிய பீர் தயாரிக்கப்பட்டுள்ளது. இது. சார்லஸின் வாழ் நாள் சேவையைப் பாராட்டி, தயாரிக்கப்பட்டுள்ளளதாக கூறப்படுகிறது.