1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 13 ஏப்ரல் 2023 (18:03 IST)

அமெரிக்காவை அச்சுறுத்தும் ’மாமிசம் உண்ணும்’ பாக்டீரியா: 2 நாட்களில் உயிரிழப்பா?

அமெரிக்காவில் தற்போது மாமிசம் உண்ணும் பாக்டீரியா பரவி வருவதாகவும் இந்த பாக்டீரியா பாதிக்கப்பட்ட நபர்கள் இரண்டு நாட்களில் உயிரிழந்து வருவதாகவும் கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
அமெரிக்காவில் உயிருக்கு ஊறு விளைவிக்கும் விப்ரியோ வல்னிஃபிகஸ் என்ற பாக்டீரியா மிக வேகமாக பரவி வருவதாகவும் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஒன்று அல்லது இரண்டு நாளில் இறக்கும் நிலை ஏற்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
 
இந்த பாக்டீரியா மாமிசம் உண்ணும் திறன் கொண்டது என்றும் எனவே இதை மாமிசம் உண்ணும் பாக்டீரியா என்று அழைக்கின்றனர். கடந்த 1988, 2016 ஆம் ஆண்டுகளில் அமெரிக்காவில் இந்த பாக்டீரியா பரவியதாகவும் அப்போது 159 பேர் இறந்ததாகவும் கூறப்படுகிறது. 
 
தற்போது மாமிசம் உண்ணும் பாக்டீரியா அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை பகுதியில் அதிகரித்து வருவதை அடுத்து மருத்துவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்து வருகின்றனர்.
 
Edited by Mahendran