போரில் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் உக்ரைனுக்கு துணையாக நிற்போம்- அமெரிக்கா
உக்ரைன் நாட்டின் மீது ரஷிய ராணுவ போர் தொடுத்து 1 ஆண்டு நிறைவடைந்துள்ளது. ரஷியாவுக்கு எதிராக உக்ரைனுக்கு ஆதரவாக மேற்கு உலக நாடுகள் நேட்டோ கூட்டமைப்பும், உக்ரைன் நாட்டிற்கு நிதியுதவியும், ஆயுதத் தளவாடங்களும் அளித்து உதவி வருகின்றன.
எனவே உக்ரைன் நாடு, வல்லரசான ரஷியாவுக்கு எதிராகப் போரிட்டு, பதிலடி கொடுத்து வருகிறது.
இந்த நிலையில் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் ரஷியாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு துணையாக நிற்போம் என்றறு அமெரிக்கா தெரிவித்துள்ளது.
தற்போது இரு நாடுகளிடையே போர் முடிவுக்கு கொண்டுவருவதற்கான முயற்சிகள் சாத்தியமில்லை என்பதால், அமெரிக்கா நாட்டு வெளியுறவு அமைச்சர் அந்தோனி பிளிங்கன், உக்ரைனின் வெளியுறவு அமைச்சர் டிமிடரோ குலோபாவை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பேசினார்.
இதையடுத்து, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,ஐரோப்பிய பகுதிக்ளில் அமைதி மற்றும் பாதுகாப்பு நிலவ உக்ரைனின் வெற்றி முக்கியமானது என்றும், ரஷியாவுக்கு எதிரான போரில் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் உக்ரைனுக்கு துணையாக நிற்போம் என்று கூறியுள்ளது.