திங்கள், 18 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Murugan
Last Modified: புதன், 7 செப்டம்பர் 2016 (16:23 IST)

45 நிமிடங்களில் பிரபாகரன் கொல்லப்பட்டார் : முன்னாள் இலங்கை தளபதி தகவல்

45 நிமிடங்களில் பிரபாகரன் கொல்லப்பட்டார் : முன்னாள் இலங்கை தளபதி தகவல்

2009ம் ஆண்டு முல்லைத்தீவில் நடைபெற்ற போரில் பிரபாகரன் கொல்லப்பட்டார் என்று இலங்கை ராணுவ முன்னாள் தளபதி கமால் குணரத்ன கூறியுள்ளார்.


 

 
அப்போது நடைபெற்ற போரில், இலங்கை ராணுவத்தின் 53வது டிவிசனுக்கு இவர்தான் தலைமை வகித்தார். இவரின் படை பிரிவிடம்தான் பிரபாகரனின் இளையமகன் பாலச்சந்திரன் அகப்பட்டான். பின்னர் சிறுவன் என்று பாராமல் அவனை சுட்டுக் கொன்றது இலங்கை ராணுவம்.
 
இலங்கை ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட கமால் குணரத்ன  ‘நந்தி கடலுக்கான பாதை’ என்ற நூலை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தனது யுத்த அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.
 
அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது :
 
எனது தலைமையிலான படைதான் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், கடற்புலிகளின் தளபதி சூசை ஆகியோரை கொன்றது. 2009ம் ஆண்டு மே 19ம் தேதி காலை 9.30 மணிக்கு தொடங்கிய போர், அன்றிரவு 10.15 மணி வரை நடைபெற்றது.
 
நந்திக்கடலில் 45 நிமிடங்கள் நடந்த போரில் பிரபாகரன் கொல்லப்பட்டார்.  அதேபோல், பொட்டம்மான் அதற்கு முதல் நாளே இறந்துவிட்டார். பிரபாகரனின் மூத்த மகன் சார்லஸ் ஆண்டனியின் அன்றே உயிரிழந்தார்” என்று கூறியுள்ளார்.